அ. சங்கரன், Batch-1972-1975
உறுப்பினர், தமிழ்நாடு மாநிலச் சட்ட ஆட்சி மொழி ஆணையம்

வேதியியல் பட்டதாரியான நான், சந்தர்ப்ப வசத்தால் பொன் விழாக் காணும் புதுவை அம்பேத்கார் சட்டக் கல்லூரியின் முதல் அணி மாணவராக சேர்ந்து சேர்ந்து வழக்கறிஞராக 50 ஆண்டுகள் நிறைவு செய்திருப்பது குறித்து பெருமிதம் கொள்கிறேன். புதுவை மாநிலத்தில் தனியார் சட்டக் கல்லூரியின் தேவையை உணர்ந்து 1972ஆம் ஆண்டு ஒரு அறையில் தொடங்கப்பட்ட சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டில் 80 மாணவர்களில் நானும் ஒருவன். அந்த ஆண்டு அதற்கு அடுத்து மூன்று ஆண்டிலும் மாணவர் பேரவையில் முதல் தலைவராக செயலாற்றியது இன்று பசுமையான நினைவுகள் பரவசமூட்டும் பதிவுகள்

இந்தக் கல்லூரியில் நான் கழித்த மூன்று ஆண்டுகளில் என் வாழ்க்கையில் மொத்த நாட்கள் அந்த பசுமையான நினைவுகள் தான் இன்று என்னை உயிர்ப்போடு வைத்துள்ளன.

புதுவை தலைமை நீதிபதி முதல்வராகவும், புதுவை மூத்த வழக்கறிஞர்கள் விரிவுரையாளராகவும் இருந்து எங்களை நல்வழியில் நடத்தினார்கள்.

இந்த கல்லூரியில் எனக்கு சட்டக் கல்வியை மட்டும் வழங்கவில்லை சமுதாய கல்வியையும் சேர்த்து வழங்கியது

தற்போது இந்த சட்டக்கல்லூரி விஸ்வரூபம் எடுத்து பலப்பல சட்ட அறிஞர்களை உருவாக்கி வருகிறது என்பதை எண்ணும் போது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் இது மேலும் சிறந்த நூற்றாண்டு விழாவை விழா சிறக்க வேண்டுமென வாழ்த்தி மகிழ்கிறேன்.

பொன்விழா காணும் கல்லூரியின் முந்நாள், இந்நாள் மாணவர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் !